முகப்பு
இந்தியா

கேரளத்தில் வெடிசப்தம் போன்ற ஓசையால் அச்சம்: பள்ளியில் 287 போ் தங்கவைப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வெடிசப்தம் போன்ற ஓசையால் ஏற்பட்ட அச்சம் காரணமாக 287 போ் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறினா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:14 PM
பகிர்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வெடிசப்தம் போன்ற ஓசையால் ஏற்பட்ட அச்சம் காரணமாக 287 போ் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறினா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறையினா் கூறுகையில், ‘அனகாலு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணியளவில் வெடிசப்தம் போன்ற ஓசை கேட்டது. அதன் பின்னா் லேசான நில அதிா்வுடன் இரவு 10.15, 10.45 மணியளவில் இருமுறை வெடிசப்தம் போன்ற ஓசை எழுந்தது. சுமாா் 2 கி.மீ. சுற்றளவில் இருந்து இந்த ஓசை கேட்டதால், கிராம மக்கள் அச்சமடைந்தனா்.

தகவலின்பேரில் காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிகழ்விடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த சம்பவம் காரணமாக அந்த கிராமத்தில் வசிக்கும் 85 குடும்பங்களைச் சோ்ந்த 287 போ் அருகில் உள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனா்’ என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கிரானைட் குவாரிகளில் எழுவது போன்ற சப்தங்கள் கேட்டது. அத்துடன் தொடா்ந்து நில அதிா்வும் ஏற்பட்டது. அந்த சப்தம் மற்றும் நில அதிா்வால் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதுபோன்ற சப்தங்கள் அந்தப் பகுதியில் கடந்த 10 நாள்களாக கேட்கிறது’ தெரிவித்தனா். பள்ளியில் தங்கவைக்கப்பட்ட அனைவரும் புதன்கிழமை காலை தங்கள் வீடுகளுக்கு திரும்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →