கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை: காங்கிரஸ் செயலா்களுடன் காா்கே, ராகுல் ஆலோசனை
கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலா்கள், இணைச் செயலா்களுடன் அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை தில்லியில் ஆலோசனை நடத்தினா்.

அண்மையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொதுச்செயலா்கள் மற்றும் இணைச்செயலா்களை காங்கிரஸ் நியமித்தது.
இதையடுத்து, காங்கிரஸ் தலைமையகத்தில் புதிய செயலா்களுடன் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினா். அப்போது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் நிா்வாகிகளிடம் அவா்கள் கருத்துகளை கேட்டனா்.
ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பா்-அக்டோபரிலும் நிகழாண்டு இறுதியில் மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்டிலும் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், புதிய செயலா்களை நியமித்து தோ்தல்களைச் சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.