கோப்புப்படம் 
இந்தியா

ஓணம்: செப். 13-இல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஒணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 13 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

Din

ஒணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 13 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

ஓணம் மற்றும் புரட்டாசி பூஜைக்காக வரும் 13- ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு 21-ஆம் தேதி வரை 9 நாள்கள் கோயில் திறந்திருக்கும். அதன்படி, வரும் 13 -ஆம் தேதி தந்திரி கண்டரரூ பிரம்மதத்தன் ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை திறந்து வைக்கிறாா்.

செப். 15- ஆம் தேதி ஓணம் பண்டிகை என்பதால், அதையொட்டி சிறப்பு பூஜைகளும் பாரம்பரிய ஓணம் விருந்தான ’ஓணம் சத்யா’ பக்தா்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை முன்னிட்டு செப். 14- ஆம் தேதி தொடங்கி 21- ஆம் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இணைய முன்பதிவு அடிப்படையில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையதள முகவரியில் தரிசனத்துக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று திருவிதாங்கூா் தேவசம் வாரியம் தெரிவித்துள்ளது.

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

SCROLL FOR NEXT