இந்தியா

8.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளைத் தரும் மீஷோ!

சுமார் 8.5 லட்சம் பருவகால வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அறிவித்துள்ளது

DIN

பண்டிகை காலத்திற்கு முன்னதாக சுமார் 8.5 லட்சம் பருவகால வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அறிவித்துள்ளது, மீஷோ விற்பனை தளம்.

பண்டிகை காலம் நெருங்குகையில், தரமான தயாரிப்புகளை மிகக் குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆன்லைன் விற்பனை தளமான மீஷோ. தனிப்பட்ட தொழில்முனைவோர் உள்பட 100 மில்லியன் சிறு வணிகங்கள் ஆன்லைனில் வெற்றி பெறுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் மீஷோவில், இந்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு, 5 லட்சம் எண்ணிக்கையில் பருவகாலத் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளனர்.

வரிசைப்படுத்துதல், உற்பத்தி, பேக்கேஜிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குறுகிய மற்றும் விரிவான பயிற்சி அமர்வுகளை மீஷோ வழங்குகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பருவகால வேலைகளில் சுமார் 70 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.

டெல்லிவெரி, ஈகாம் எக்ஸ்பிரஸ், ஷாடோஃபாக்ஸ், எக்ஸ்பிரஸ்பீஸ் முதலான முக்கிய மூன்றாம் தரப்பு தளவாட வழங்குநர்களுடன் மீஷோ இணைந்து செயல்படுகிறது. இந்த தளவாடக் கூட்டாண்மை, வால்மோவுடன் இணைந்து, சுமார் 3.5 லட்சம் பருவகால வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளது.

சந்தையில் திருப்பி அனுப்பப்படும் பொருள்களைக் கையாளுதல், வரிசைப்படுத்துவது, ஏற்றுவது, இறக்குதல், கையாளுதல் முதலான பணிகள் இதில் அடங்கும்.

மேலும், 'வுமன் இன் லாஜிஸ்டிக்ஸ்' முன்முயற்சியின்கீழ், கிடங்குகள் மற்றும் வரிசைப்படுத்தல் மையங்களில் உள்ள கூடுதல் திறனில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை பெண்களால் பூர்த்தி செய்யவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT