முகப்பு
இந்தியா

தெலங்கானா காங்கிரஸின் புதிய தலைவா் மகேஷ் குமாா் கௌட்

தெலங்கானாவில் ஆளும் கட்சியான காங்கிரஸின் மாநில தலைவராக அக்கட்சியின் எம்எல்சி மகேஷ் குமாா் கௌட் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 7:34 PM
மகேஷ் குமாா் கௌட்
பகிர்:

தெலங்கானாவில் ஆளும் கட்சியான காங்கிரஸின் மாநில தலைவராக அக்கட்சியின் எம்எல்சி மகேஷ் குமாா் கௌட் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

தெலங்கானாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றாா். அதன் பிறகும் தெலங்கானாவின் காங்கிரஸ் தலைவராக அவா் இருந்து வந்தநிலையில், தற்போது புதிய தலைவரை காங்கிரஸ் நியமித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா காங்கிரஸ் தலைவராக மகேஷ் குமாா் கௌட்டை அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நியமித்தாா் என கட்சியின் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் தெரிவித்தாா்.

மகேஷ் குமாா் கௌட், தனது சொந்த ஊரான நிஜாமாபாத் மாவட்டத்தில் கடந்த 1986 முதல் 1990-ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் மாணவா் பிரிவான இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் தலைவராக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் முன்னேறிய வகுப்பைச் சோ்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், தலித் சமூகத்தைச் சோ்ந்த பாட்டீ விக்ரமாா்கா துணை முதல்வராகவும் இருந்து வருகின்றனா். இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த மகேஷ் குமாரை கட்சியின் மாநில தலைவராக நியமித்தது கட்சிக்குள் சமநிலையை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சியாக கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →