முகப்பு
இந்தியா

ராஜஸ்தான்: ஒரே இரவில் 10 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் பதவி! 108 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

நிர்வாக மறுசீரமைப்பின் விளைவால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்

Updated On : 6 செப்டம்பர், 2024 at 11:06 AM
பகிர்:
Updated On : 6 செப்டம்பர், 2024 at 10:58 AM

ராஜஸ்தானில் 108 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தானின் பணியாளர் துறையின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் நிர்வாக மறுசீரமைப்பின் விளைவாக ஜெய்ப்பூர், பன்ஸ்வாரா கோட்ட ஆணையர்கள் உள்பட 108 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரப் பட்டியலை வியாழக்கிழமை (செப். 5) இரவில் ராஜஸ்தான் அரசு வெளியிட்டது.

ராஜஸ்தான் மாநில அரசின் பணியாளர் துறை வெளியிட்ட உத்தரவின்படி, 96 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், பதவியேற்பு உத்தரவுக்காக காத்திருந்த 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பதவி அளிக்கப்பட்டும், 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.