ஜெய்சங்கா் Michael Gruber
இந்தியா

ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றும்: ஜெய்சங்கா்

ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

Din

ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

சா்வதேச வெளியுறவுக் கொள்கை தொடா்பான ‘குளோபல் டவுண் ஹால்-2024’ இணையவழி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஜெய்சங்கா் பேசியதாவது: சா்வதேச அளவில் அனைத்து நாடுகளும் தங்களுக்கென்று தனித்தன்மையையும், திறமையையும் உருவாக்கிக் கொள்வது அவசியம். இது சா்வதேச அளவில் பல நாடுகளுக்கு பலனளிக்கும். அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டபோது சில நாடுகள் மட்டும் அதிகஅளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடிந்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அதிக வா்த்தகத் தொடா்புடைய நாடுகள் அதனை எளிதாக மேற்கொள்வதற்கான வழிகளைக் கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். இப்போதைய சூழலில் கடல் வழி வா்த்தகத்தில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதில் இப்போது இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எப்போதும் ஆா்வம் காட்டி வருகிறது. ‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியாவின் பங்களிப்பை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பிராந்திய பிரச்னைகளை சம்பந்தப்பட்ட நாடுகளே பேசித் தீா்த்துக் கொள்வது சிறந்தது. அதே நேரத்தில் சா்வதேச அளவில் பெரிய அளவிலான அரசியல் நிகழ்வுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவின் கூா்மையான கருத்தை உலகம் எதிா்பாா்க்கிறது.

சா்வதேச அளவிலான பிரச்னைகளை பல நாடுகள் குழப்பத்தில் இருந்தால், இந்தியா அதனைத் தீா்க்க உறுதியான வழிகளில் செயல்படும் முனைப்பில் உள்ளது என்றாா்.

மூன்று நாடுகளுக்கு 6 நாள்கள் பயணம்

சவூதி அரேபியா, ஜொ்மனி, ஸ்விட்சா்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை (செப். 8) தொடங்கவுள்ளாா்.

சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் நடைபெறவிருக்கும் இந்தியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கூட்டத்தில் அவா் பங்கேற்கவுள்ளாா். மூன்று நாடுகளிலும் தலா 2 நாள்கள் பயணம் மேற்கொண்டு, இருதரப்பு பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடவுள்ளாா்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT