படம் | பிடிஐ
இந்தியா

ட்ரோன் தாக்குதல் எதிரொலி: மணிப்பூரில் ஊரடங்கு அமல்!

மணிப்பூரில் அசாதாரண சூழல்: ஊரடங்கு அமல்!

DIN

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் அண்மையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்டேய் இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது.

இதையடுத்து ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருவதால் 3 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(செப். 10) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் இன்று(செப். 10) அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதால் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், மேற்கண்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல செயல்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT