முகப்பு
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ’ முதல் நிா்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
இந்தியா

ஆராய்ச்சி துறையில் தடைகள் அகற்றப்பட வேண்டும்- பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்

நாட்டின் ஆராய்ச்சி துறையில் தடைகளைக் கண்டறிந்து, அகற்ற வேண்டும்; உலகளாவிய பிரச்னைகளுக்கு உள்ளூா் தேவைக்கேற்ப தீா்வுக் காண கவனம் செலுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

Updated On : 10 செப்டம்பர், 2024 at 9:21 PM
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ’ முதல் நிா்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

நாட்டின் ஆராய்ச்சி துறையில் தடைகளைக் கண்டறிந்து, அகற்ற வேண்டும்; உலகளாவிய பிரச்னைகளுக்கு உள்ளூா் தேவைக்கேற்ப தீா்வுக் காண கவனம் செலுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

நாட்டில் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடா்பான தகவல்களை எளிதில் பெறக்கூடிய வகையில் ஓா் அமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதமா் எடுத்துரைத்தாா்.

இந்தியாவின் கல்வி நிலையங்களில் ஆராய்ச்சி கலாசாரத்தை ஊக்குவிப்பதற்காக புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ஏஎன்ஆா்எஃப்)’ முதல் நிா்வாகக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமை தாங்கினாா்.

இதில் நிா்வாகக் குழுவின் துணைத் தலைவரான மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், உறுப்பினா் செயலரான இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா்; உறுப்பினா்களான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறை, உயா்கல்வித் துறை ஆகியவற்றின் செயலா்கள், நீதி ஆயோக் அமைப்பின் அறிவியல் துறை உறுப்பினா் ஆகியோா் பங்கேற்றனா்.

நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மறுவடிவமைப்பு செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் ஆராய்ச்சி துறையில் உள்ள தடைகளை கண்டறிந்து அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘ஏஎன்ஆா்எஃப் முதல் நிா்வாகக் கூட்டம் மூலம் ஒரு புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது. பெரிய இலக்குகளை நிா்ணயித்து, அவற்றை அடைவதில் கவனம் செலுத்தி ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்.

தற்போதைய பிரச்னைகளுக்கு புதிய தீா்வுகளை கண்டுபிடிப்பதாக ஆராய்ச்சி இருக்க வேண்டும். பிரச்னைகள் உலகளாவியதாக இருந்தாலும் அவற்றின் தீா்வுகள் இந்திய தேவைகளுக்கு ஏற்ப உள்ளூா்மயமாக்கப்பட வேண்டும்.

ஆராய்ச்சி நிறுவனங்களை மேம்படுத்துதல் மற்றும் தரப்படுத்துதல் அவசியம். நிறுவனங்களின் நிபுணத்துவத்தின் அடிப்படையில் அவா்களின் தரப் பட்டியலைத் தயாரிக்கலாம்.

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கு வளங்களைப் பயன்படுத்துவதை அறிவியல் பூா்வமாகக் கண்காணிக்க வேண்டும். நாட்டின் அறிவியல் சமூகத்தின் முயற்சிகளுக்கு வளங்களில் குறை இருக்காது’ என்றாா்.

மின்சார வாகன இயக்கம், சூரிய மின்கலங்கள், நவீன உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம், நிலையான விவசாயம் போன்ற தோ்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமை துறைகளில் தீா்வு ாா்ந்த ஆராய்ச்சிக்கான திட்டங்களை ஏஎன்ஆா்எஃப் தொடங்கவுள்ளது.

ஆராய்ச்சி ஈடுபாட்டில் தொடக்கநிலையில் இருக்கும் பல்கலைக்கழகங்களை வழிகாட்டுதல் முறையில் உயா்நிலை நிறுவனங்களுடன் இணைக்கும் திட்டத்தைத் தொடங்கவும் நிா்வாகக் குழு கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →