கேஜரிவால் Center-Center-Delhi
இந்தியா

கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் செப். 25 வரை நீட்டிப்பு!

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் செப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் செப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இருப்பினும் இந்த வழக்கில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்ததால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் சிபிஐ வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

தொடர்ந்து, நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், திகார் சிறையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையில், கேஜரிவாலின் நீதிமன்றக் காவலை செப். 25 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் மற்றும் சிலருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கையில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளம் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!

துா்க்மேன் கேட் வன்முறை: குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை - தில்லி நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT