EPS
இந்தியா

ஹரியாணா தேர்தல்: 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

ஹரியாணா தேர்தலை முன்னிட்டு 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி.

DIN

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் 4 ஆம் கட்டமாக 21 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் பாஜகவின் யோகேஷ் பைராகிக்கு எதிராக ஜூலானா தொகுதியில் கவிதா தலால் களமிறக்கப்பட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஹரியாணா பேரவைத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள நான்காவது வேட்பாளர் பட்டியல் இதுவாகும்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராஜ் கௌர் கில் அம்பாலா கண்டோன்மென்ட் தொகுதியிலும், சுனில் பிண்டல் கர்னால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நிஷாந்த் ஆனந்த் குருகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒத்துவராததால், ஹரியாணா பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் 20 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இதுவரை 61 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (செப்டம்பர் 12) கடைசி நாளாகும்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலில் தில்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பஞ்சாபில் தனித்து போட்டியிட்டன. ஹரியாணா பொதுத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு இடத்தை வழங்கியது. அதிலும் ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது.

2019 ஆம் ஆண்டு ஹரியாணா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT