வினேஷ் போகத் வேட்புமனுத் தாக்கல் x
இந்தியா

வினேஷ் போகத் வேட்புமனுத் தாக்கல்!

ஹரியாணா தேர்தலில் போட்டியிடும் வினேஷ் போகத் வேட்புமனுத் தாக்கல் செய்தது பற்றி...

DIN

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த வினேஷ் போகத், கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்த பிறகு அந்த கட்சியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

வினேஷ் போகத் பேட்டி

ஜுலானா சட்டப்பேரவைத் தொதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை வினேஷ் போகத் சந்தித்தார்.

அப்போது, “அரசியலுக்கு வருவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜுலானா மக்கள் எனக்கு அளித்து வரும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்தக் காட்சி அவசியமில்லை: ஷேன் நிகம்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

ஜூலை மாதத்தின் சிறந்த வீரர்..! விருதுகளைக் குவிக்கும் மெஸ்ஸி!

டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

SCROLL FOR NEXT