உ.பி.யில் பதற்றம் 
இந்தியா

நெடுஞ்சாலையில் தலையில்லாத பெண்ணின் உடல்: உ.பி.யில் பதற்றம்!

நெடுஞ்சாலையில் தலையில்லாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் உ.பி.யில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தலையில்லாத பெண்ணின் உடல் நெடுஞ்சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, நெடுஞ்சாலையில் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை, நெடுஞ்சாலையில் தலையில்லாத பெண்ணின் உடல் உடையின்றி கண்டெடுக்கப்பட்ட நிலையில், 24 மணி நேரம் ஆகியும், இதுவரை பெண்ணின் அடையாளம் காணப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணியளவில், பெண்ணின் உடலை மக்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறிது விசாரிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் எந்த சிசிடிவி கேமராவும் இல்லை. ஆனால் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கேமராவில் அப்பெண் தனியாக நடந்து செல்வது பதிவாகியிருக்கிறது.

அந்த சிசிடிவியில் பெண் அணிந்திருந்த உடைகள் கிழிக்கப்பட்டு நெடுஞ்சாலையில் வீசப்பட்டுள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். குற்றவாளிகள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

பெண்ணின் உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் கொல்லப்பட்டது எவ்வாறு என்று தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அப்பகுதியில் பெண் யாரும் காணாமல் போனதாகப் புகார் வரவில்லை. இதனால், சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, அப்பகுதியில் மக்களிடம் அப்பெண்ணைப் பற்றி விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

SCROLL FOR NEXT