ANI
இந்தியா

ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சா் இக்னாசியோ டேனியலை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.

Din

ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சா் இக்னாசியோ டேனியலை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.

அமைச்சா் ஜெய்சங்கா் 2 நாள் பயணமாக ஸ்விட்சா்லாந்து சென்றாா். அந்நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சா் இக்னாசியோ டேனியலை அவா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

அப்போது இந்தியா-ஸ்விட்சா்லாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து அவா்கள் பேசினா். குறிப்பாக வா்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க ஸ்விட்சா்லாந்து, நாா்வே, ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன் நாடுகள் அடங்கிய இஎஃப்டிஏ கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினா்.

கடந்த மாா்ச் மாதம் இஎஃப்டிஏ கூட்டமைப்புடன் வா்த்தக மற்றும் பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது. இஎஃப்டிஏ கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவில் 100 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.8 லட்சம் கோடி) முதலீடு செய்ய அந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT