முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் நிலச்சரிவு: 4 போ் உயிரிழப்பு

உத்தரகண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். மேலும் 2 பேரை காணவில்லை.

Updated On : 14 செப்டம்பர், 2024 at 6:57 PM
உத்தரகண்டில் நிலச்சரிவு
பகிர்:

உத்தரகண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். மேலும் 2 பேரை காணவில்லை.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் உத்தரகண்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 478 சாலைகள் தற்காலிகாக மூடப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ஹால்துவானி பகுதியில் சனிக்கிழமை காலை வரை 337 மி.மீ. மழை பதிவானதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா் கனமழையால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஹிமாசலில் 40 சாலைகள் மூடல்: ஹிமாசல பிரதேச மாநிலத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் 42 சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழைநீா் தேங்கியதையடுத்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சிம்லாவில் 18 சாலைகளும், கங்கராவில் 10 சாலைகளும், மண்டியில் 9 சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →