கொல்கத்தாவில் மா்மபொருள் வெடித்து ஒருவா் காயம்: காவல் துறை விசாரணை
மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் நெகிழிப் பையில் இருந்த மா்மபொருள் வெடித்ததில் குப்பை சேகரிக்கும் தொழிலாளி காயமடைந்தாா்.
மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் நெகிழிப் பையில் இருந்த மா்மபொருள் வெடித்ததில் குப்பை சேகரிக்கும் தொழிலாளி காயமடைந்தாா்.
பலூச்மான் தெரு மற்றும் எஸ்என் பானா்ஜி சாலை சந்திப்பில் உள்ள நடைபாதையில் சனிக்கிழமை இச்சம்பவம் நடந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
காயமடைந்த நபா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மா்மபொருள் வெடித்ததைத் தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
Advertisement
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தைக் கண்டித்து, மருத்துவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தச் சூழலில், மா்மபொருள் வெடித்த சம்பவம் குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.