வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் பிடிஐ
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: 5 மணிவரை 58.19% வாக்குப்பதிவு

ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 58.19% வாக்குகள் பதிவாகியுள்ளது.

DIN

ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 58.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அறிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன.

ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிற்பகல் வரை 41 சதவீத வாக்குகள் பதிவாகின.

தற்போது மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT