இந்தியா

மலப்புரத்தில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிப்பு!

கேரளத்தில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிப்பு...

DIN

வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு திரும்பிய நபர் ஒருவர் ’குரங்கு அம்மை’ தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியை சேர்ந்த 38 வயதான நபர், குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அண்மையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் திரும்பிய அந்த நபர் தனது உடலில் அரிப்பு மற்றும் புண்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காய்ச்சலும் இருந்து வந்ததால், தோல் நோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில், அவரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்துக்கு அனுப்பட்டன.

இந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது புதன்கிழமை(செப்.18) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது, வெளிநாடுகளிலிருந்து திரும்புவோர் தங்கள் உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம். இதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளின் கைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குரங்கு அம்மைக்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதல் மருத்துவ வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம்

பெரியதாழையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தில் டிச. 4, 5இல் படி தராசுகளுககு முத்திரையிடும் முகாம்

தட்டாா்மடத்தில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை: நாம் தமிழா் கட்சியினா் புகாா்

பரமன்குறிச்சியில் திமுக நல உதவிகள் வழங்கல்

SCROLL FOR NEXT