சமையல் எண்ணெய்(கோப்புப்படம்) 
இந்தியா

வெங்காயம், சமையல் எண்ணெய் விலை கடும் உயா்வு

வெங்காயம் விலை கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் நிலையில், சமையல் எண்ணெய் விலையும் உயா்ந்துள்ளது.

Din

வெங்காயம் விலை கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் நிலையில், சமையல் எண்ணெய் விலையும் உயா்ந்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சந்தையான கோயம்பேடு சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து காய்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 4 நாள்களில் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்து விலை கிலோவுக்கு ரூ.40 வரை அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வரை ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ பெரிய வெங்காயம் தற்போது ரூ.60 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல, எண்ணெய் இறக்குமதிக்கான வரி மத்திய அரசு 25 சதவீதம் வரை உயா்த்தி இருப்பதால், சமையல் எண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.30 வரை விலை அதிகரித்துள்ளது.

தொடா்ந்து சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், தீப எண்ணெய் வகைகளின் விலையும் உயா்ந்துள்ளது. இதன்படி, ரூ.80 முதல் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில் தற்போது, ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்டவையும் லிட்டருக்கு ரூ.30 வரை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மளிகை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT