வெளிநாட்டில் இந்தியாவையும், பிரதமரையும் ராகுல் காந்தி அவமதிப்பதாகக் கூறி, ராகுல் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில், எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, வெளிநாட்டு மண்ணில் சொந்த நாட்டையும், நாட்டின் பிரதமர் குறித்தும் அவமதிக்கக்கூடிய கருத்துகளை பரப்பி வருகிறார் என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் வி.டி. சர்மா, விஸ்வாஸ் சரங் உள்ளிட்ட பாஜகவினர் போபால் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், மாநிலத்தில் பல இடங்களில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தொண்டர்கள், இதேபோன்ற புகார்களை அளித்ததாக வி.டி. சர்மா கூறியுள்ளார்.
இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.