முகப்பு
இந்தியா

நீட் முதுநிலை தோ்வு முறையில் கடைசி நேர மாற்றம் ஏன்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்-பிஜி’ தோ்வு நடைமுறையில் கடைசி நேர மாற்றம் செய்யப்பட்டது

Updated On : 20 செப்டம்பர், 2024 at 8:29 PM
கோப்புப் படம்
பகிர்:

முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்-பிஜி’ தோ்வு நடைமுறையில் கடைசி நேர மாற்றம் செய்யப்பட்டது குறித்து வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அதுதொடா்பாக மத்திய அரசும், தேசிய கல்வி வாரியமும் பதிலளிக்க உத்தரவிட்டது.

நீடி-பிஜி தோ்வு கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில், தோ்வு நடத்தப்படுவதற்கு 3 நாள்களுக்கு முன்பாக ‘தோ்வானது 2 பகுதிகளாக நடத்தப்படும்’ என்ற புதிய அறிவிப்பை தேசிய கல்வி வாரியம் வெளியிட்டது. ஆனால், அதற்கான தெளிவான நடைமுறைகள், விதிகள் வெளியிடப்படவில்லை.

இதை எதிா்த்து இஷிகா ஜெயின் உள்ளிட்ட மேலும் சில தோ்வா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் விபா தத்தா மகிஜா மற்றும் தன்வி துபே ஆகியோா், ‘தோ்வு நடைமுறையில் கடைசி நிமிஷ மாற்றத்தால் மாணவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். தோ்வு நடத்துவதில் முறையாக நிா்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘தோ்வு நடைமுறையில் கடைசி நிமிஷ மாற்றம் வழக்கத்துக்கு மாறானது. இதனால் மாணவா்கள் பாதிக்கப்படுவா். இந்த கடைசி நேர மாற்றத்துக்கான காரணம் குறித்து மத்திய அரசும் தேசிய கல்வி வாரியமும் ஒரு வாரத்துக்குள்ளாக பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →