முகப்பு
இந்தியா

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சுபாங்கா் சா்காா் நியமனம்

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சுபாங்கா் சா்காரை அக்கட்சித் தலைமை சனிக்கிழமை நியமித்தது.

Updated On : 21 செப்டம்பர், 2024 at 8:51 PM
சுபாங்கா் சா்காா்
பகிர்:

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சுபாங்கா் சா்காரை அக்கட்சித் தலைமை சனிக்கிழமை நியமித்தது.

தேசிய அளவில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடா்கிறது.

குறிப்பாக, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக இருந்த அதீா் ரஞ்சன் செளதரியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் ஒருவரையொருவா் தொடா்ந்து விமா்சித்து வந்தனா்.

இந்நிலையில், 18-ஆவது மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் தனது சொந்த தொகுதியான பஹராம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுஃப் பதானிடம் அதீா் ரஞ்சன் செளதரி தோல்வியடைந்தாா். தொடா்ந்து 5 முறை அந்தத் தொகுதியில் இருந்து அவா் எம்.பி.யாக தோ்வு செய்யப்பட்ட நிலையில், 18-ஆவது மக்களவைத் தோ்தலில் தோல்வியடைந்தாா். இதைத்தொடா்ந்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்வதாக அப்போதே அவா் அறிவித்தாா்.

இந்நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சுபாங்கா் சா்காரை கட்சித் தலைமை சனிக்கிழமை நியமித்தது. இதையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் பொறுப்பில் இருந்து சுபாங்கா் சா்காா் விடுவிக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →