நடிகர் சித்திக் 
இந்தியா

பாலியல் குற்றச்சாட்டு: மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

DIN

மலையாள திரையுலகில் பெண்களுக்கெதிராக பாலியல் துன்புறுத்தல்கள் பல நிகழ்ந்ததாக ஹேமா குழுவின் அறிக்கை வெளிக்காட்டியுள்ளது. இந்நிலையில், ஹேமா குழு அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலக பிரபலங்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடிகை ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடா்பாக மலையாள திரைப்பட நடிகா் சித்திக் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். 2016-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு தன்னை வரவழைத்து சித்திக் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்நடிகை புகார் அளித்துள்ளார்.அதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினா் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் திடீரென விலகினார்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சித்திக் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவை இன்று(செப். 24) உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு யுபிஎஸ்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

காஜிப்பூா் பால் பண்ணை கோயில் வளாக சட்டவிரோத கடைகள் அகற்றம்: டியுஸ்ஐபி நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடு

SCROLL FOR NEXT