ரயில்கள் மீது கற்களை வீசித் தாக்குதல்... பயணிகள் காயம்!
உத்தரப் பிரதேசத்தில் மகாபோதி எக்ஸ்பிரஸ் மற்றும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாகுதலில் ஈடுபட்டத்தால் பயணிகள் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் மகாபோதி எக்ஸ்பிரஸ் மற்றும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாகுதலில் ஈடுபட்டத்தால் பயணிகள் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தைக் கடந்த மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயிலிலும், பிரயாக்ராஜ் மாவட்டத்தைக் கடந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் நேற்று மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக வடக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
”மகாபோதி எக்ஸ்பிரஸ் நேற்று மாலை (செப். 23) மிர்சாபூர் மாவட்டத்தைக் கடக்கும்போது சிலர் கற்களை வீசி தாக்கினர்.
Advertisement
இதேபோல, நேற்று இரவு 9.45 மணியளவில் தில்லியிலிருந்து வந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பிரயாக்ராஜ் மாவட்டத்தைக் கடக்கும் போது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இரு சம்பவங்களிலும் பயணிகள் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் வைத்து முதலுதவி வழங்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை புகார் அளித்துள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடங்களில் யாரையும் காணவில்லை என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடைபெற்று வருகிறது” என ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி திரிபாதி கூறினார்.