முகப்பு
இந்தியா

புணேவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

புணேவில் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:57 AM
கனமழை - Center-Center-Hyderabad
பகிர்:

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கனமழை காரணமாக புணே மாவட்ட நிர்வாகமும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

புணே நகருக்கு இன்று(செப்.26) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி புணேயில் மெட்ரோ ரயில் சேவை மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவிருந்தார்.

கனமழை எச்சரிக்கை காரணமாக அவரின் புணே பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.