முகப்பு
இந்தியா

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஒருவரையொருவர் அறியாத நால்வர் கைது!

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் விளைந்த விபரீதம்

Updated On : 27 செப்டம்பர், 2024 at 1:26 PM
பகிர்:

சமூக ஊடகங்கள் மூலம் பழகிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புணேவில் ஒரு கல்லூரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவர், தானும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த விழிப்புணர்வு ஏற்பாட்டாளர்கள் சிறுமியிடம், மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து சிறுமி கூறியதாவது, சமூக ஊடகங்களின் மூலம் பழகிய 4 பேருடன் தனித்தனி இடங்களில் வெவ்வேறு சம்பவங்களாக சந்தித்ததாகக் கூறினார். அவர்கள் நால்வரும் ஒருவரையொருவர் அறியாதவர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்பட்ட சந்திப்பின்போது, சிறுமியை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அதனை விடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து, சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் 20 முதல் 22 வயதுடையவர்கள் என்பதும், மீத இருவரும் 18 வயதுக்குட்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, பதின்ம வயது குற்றவாளிகளைத் தவிர்த்த இருவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். பதின்ம வயது குற்றவாளிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.