முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

தாக்குதலில் மேலும் இரு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

Updated On : 29 செப்டம்பர், 2024 at 8:14 PM
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் இரு நாள்களாக நடைபெற்றுவரும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த காவலர், தான் இறப்பதற்கு முன்பு கூட பயங்கரவாதியை சுட்டுக் கொன்று வீரமரணம் அடைந்தார்.

இந்தத் தாக்குதலில் மேலும் இரு காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதல் நடைபெற்றுவரும் துப்பாக்கிச்சூட்டில் ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்தத் தாக்குதலில், தலைமைக் காவலர் பஷீர் அஹமது குண்டுக் காயங்களுடன் போராடிக்கொண்டிருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்று வீரமரணம் அடைந்தார்.

படிக்க | சொல்லப் போனால்... செந்தில் பாலாஜியும் 4.34 லட்சம் விசாரணைக் கைதிகளும்!

இது தொடர்பாக ஜம்மு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநகரம் வெளியிட்டுள்ள பதிவில், கதுவா மாவட்டத்தின் கோங் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் தலைமைக் காவலர் பஷீர் அஹமது வீரமரணம் அடைந்தார். படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்தபோதும் பயங்கரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றார். காவல் துணை கண்காணிப்பாளர் சுக்பீர், காவல் துணை ஆய்வாளர் நியாஸ் குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலை சீராக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கதுவா மாவட்டத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 முதல் 4 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக காவல் துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கதுவா மாவட்டத்தின் கோங் பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியைத் தொடங்கினர். காவல் துறை வாகனங்களைக் கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாள்களாக துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது.

படிக்க | உ.பி.யில் மாறுவேடத்தில் இரவு ரோந்து சென்ற பெண் போலீஸ்! நடந்தது என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.