FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

காக்கிச் சட்டைகளின் கருணை...

காவல் துறையினர் என்றாலே கடினமாக இருப்பார்கள் என் மனப்பாங்கு எல்லோரிடத்திலும் உண்டு.

Updated On : 22 மார்ச் 2026, 4:10 am IST
பகிர்:

பெ.பெரியார்மன்னன்

காவல் துறையினர் என்றாலே கடினமாக இருப்பார்கள் என் மனப்பாங்கு எல்லோரிடத்திலும் உண்டு. அவர்களின் பணி அப்படிப்பட்டது. இருப்பினும், காவலர்களிடம் மனித நேயமும் உதவும் எண்ணமும் மேலோங்கி வருகிறது என்பதற்கு அண்மைக்கால நிகழ்வுகள் பல சான்றாக உள்ளன.

தமிழ்நாடு அரசு காவல் துறையில் 2009-ஆம் ஆண்டில் பணிக்குச் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து '2009 பேட்ஜ் காவல் துறை உதவும் அன்பு உள்ளங்கள் குழு' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த அமைப்பின் சார்பில் சக காவலர்களிடம் இருந்து நிதி திரட்டி, பணியின்போது இறந்து போகும் காவலர்களின் குடும்பத்தினருக்கு குழுவின் சார்பாக நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.

2024 நவம்பர் 5- இல் இறந்த சேலத்தைச் சேர்ந்த காவலர் ரஞ்சித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.23.71 லட்சமும், 2025 அக். 7-இல் இறந்த சேலம் கன்னங்குறிச்சி காவலர் அன்புராஜ் குடும்பத்தினருக்கு ரூ.24.10 லட்சமும் நிதியுதவியை வழங்கினர்.

இதுவரை 2009 குழு காவல்துறை உதவும் அன்பு உள்ளங்கள் குழு வாயிலாக, பணியின்போது மறைந்த 42 காவலர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக ரூ.10.08 கோடியை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழுவின் சார்பில் நிதியுதவியைத் திரட்டி வழங்குவதற்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இருந்து பெறப்படும் நிதி உதவி முறையாகக் கணக்கிடப்பட்டு வரவு செலவுகளை குழுவின் ஒருங்கிணைப்பாளரான தலைமைக் காவலர் பரமசிவன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments