விபத்தில் சிக்கிய கார். 
இந்தியா

குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது பேருந்து மோதல்: 7 பேர் பலி, 14 பேர் காயம்

குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது மோதிய பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியதில் 7 பேர் பலியானார்க

DIN

குஜராத்தில் தடுப்புச்சுவர் மீது மோதிய பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியதில் 7 பேர் பலியானார்கள்.

குஜராத் மாநிலம், துவாரகா-கம்பாலியா தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது பேருந்து ஒன்று சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அந்த பேருந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்களிலும் மோதியது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்தது நிறைவளிக்கிறது- மனோ தங்கராஜ்

14 பேர் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காவலர்களின் கூற்றுப்படி, சாலையின் நடுவே கடந்த மாட்டைக் காப்பாற்ற ஓட்டுநர் முயற்சித்தபோது, ​​​​கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதியதோடு இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் மீதும் மோதியதாக தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலக்கடலை பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்குரைஞா் கைது

கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை நீடிப்பு

திமுக ஆட்சியில் மா விவசாயிகளுக்கு எந்தத் திட்டமும் தொடங்கவில்லை: எல்.முருகன்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க முறைகேடு வழக்கு: கேரள சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் விசாரணை

SCROLL FOR NEXT