முகப்பு
இந்தியா

சொத்து விவகாரத்தில் தாக்கப்பட்ட முதியவர்: குடும்பத்தினர் மீது வழக்கு

முதியவரை இரும்பு கம்பி மற்றும் வாள் கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:42 PM
பகிர்:

சொத்து விவகாரத்தில் 52 வயது முதியவரைத் தாக்கிய குடும்பத்தினர் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதாக அந்த பகுதி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தக்டிர் பிரகாஷ் பாட்டீல் அவரது மகன்கள் சாகர், குரு மற்றும் ஒரு பெண் ஆகியோர் கிருஷ்ண பிரகாஷ் பாட்டீலை (52) வாள் மற்றும் இரும்பு கம்பி கொண்டு தாக்கியுள்ளனர்.

குடும்பச் சொத்துகள் குறித்த சச்சரவில் முதியவர் தாக்கப்பட்டதாகவும் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புகாரின் அடிப்படையில் கொலை செய்ய முயன்ற குற்றப் பிரிவு 307-ன் கீழ காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →