முகப்பு
இந்தியா

பஞ்சாப், சண்டீகரில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு: கேஜரிவால்

பஞ்சாப், சண்டீகர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

Updated On : 10 பிப்ரவரி 2024, 6:50 pm IST
பஞ்சாப், சண்டீகரில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்
பகிர்:

பஞ்சாப், சண்டீகர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாய விலை பொருள்கள் வீட்டு வாசலில் வழங்கும் திட்டத்தை கேஜரிவால் என்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியது, 

இரண்டு வருடத்திற்கு முன்னதாக மக்களான உங்களின் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்தது. 117 இடங்களில் 92 இடங்கள் ஆம் ஆத்மி பெற்று பஞ்சாபில் சாதனை படைத்தோம். 

Advertisement

Advertisement

மக்களவை தேர்தல் இரண்டு மாதங்களில் நிகழ உள்ளது. இன்று மீண்டும் உங்கள் ஆசிர்வாதத்தை நாடுகிறேன். பஞ்சாபில் 13 இடங்களும், சண்டீகரில் ஒரு இடமும் என மொத்தம் 14 இடங்கள் இடங்கள் இருக்கும். 

வரும் 10-15 நாள்களுக்குள் 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த 14 தொகுதிகளிலும் கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

முதல்வர் பகவந்த் மான் அரசைப் பாராட்டிய கேஜரிவால், கடந்த 2 ஆண்டுகளில் நிறைய சாதனைகளை செய்துள்ளது. 

காங்கிரஸ், அகாலி தளம் இத்தனை ஆண்களில் செய்த ஏதாவது நல்ல காரியத்தைச் சொல்லுங்கள் என்றும் அவர் எதிர்க்கட்சிகளைத் தாக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.