முகப்பு
இந்தியா

அயோத்தியில் ரூ.14.5 கோடிக்கு நிலம் வாங்கிய அமிதாப் பச்சன்!

நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்கு அருகே நிலம் வாங்கியுள்ளதாகத் தகவல்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகே ரூ.14.5 கோடியில் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பையைச் சேர்ந்த வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோத்தா (The House of Abhinandan Lodha - HoABL) நிறுவனம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே 51 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் மிகப் பிரம்மாண்டமான வீடுகள் கட்டப்பட உள்ளன. வருகிற 2028 ஆம் ஆண்டுக்குள் இவை முடிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தற்போது, நடிகர் அமிதாப் பச்சன் முதல் ஆளாக இங்கு 14.5 கோடி மதிப்பிலான இடத்தை வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் அயோத்திக்கு அருகே நிலம் வாங்கியிருப்பது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →