2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும்: அமித் ஷா
நக்சல் இயக்கங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பதிவு.
2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நக்சல் இல்லா பாரதத்தை கட்டியெழுப்புவதில் மிகப்பெரிய அடியை எடுத்துவைத்துள்ளோம். நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12-ல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு நக்சல் இயக்கத்திற்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையையும் நாட்டின் வளர்ச்சிக்கு இடைவிடாத முயற்சியையும் எடுத்து வருகிறது.
வரும் 2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கத்தை வேரோடு அழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுக்மாவில் அண்மையில் நடந்த என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!