இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து  படம்: பிடிஐ
இந்தியா

இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இரு டிரைவர்களும் பலி!

இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து தொடர்பாக...

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இரு டிரைவர்களும் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

பசுமை எரிசக்தி தொழிற்சாலைக்கு நிலக்கரி கொண்டு செல்லும் வழித்தடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த வழித்தடம் பசுமை எரிசக்தி தொழிற்சாலைக்குச் சொந்தமானவை. இவை மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்விபத்து இன்று(ஏப். 1) அதிகாலை பர்ஹைட் காவல் நிலையப் பகுதியில் உள்ள போக்னாதி அருகே ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்குப் பின்னர், இரு சரக்கு ரயில்களும் தடம் புரண்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த விபத்து குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் சாஹீர்கஞ்ச் அமீர் குமார் கூறுகையில், “அதிகாலை 3 மணிக்கு நடந்த இவ்விபத்தில் 2 ரயில் ஓட்டுநர்கள் தியானேஸ்வரர் மால்(35), அம்புஜ் மஹதே(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

2 உதவி ஓட்டுநர்கள், 2 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: செங்கல்பட்டு: கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT