நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி PTI
இந்தியா

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என கனிமொழி கோரிக்கை.

DIN

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெரிசலை தடுக்க மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டின் மிக முக்கிய வணிக நகரமான தூத்துக்குடியில் இருந்து தலைநகரம் சென்னைக்கு அன்றாடம் முத்து நகர் விரைவு வண்டி, ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மேலும் அதிகரிக்கும் வணிக தொடர்புகளை கருத்தில்கொண்டும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா விரைவு வண்டி வழித்தடத்தில் புதிய விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் மற்றும் நாகர்கோவில் விரைவு ரயில்களை இணைக்கும் இணைப்பு பயணிகள் ரயில்களை அரசு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா? என்றும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளபடி சென்னை தூத்துக்குடி இடையில் வந்தே பாரத் விரைவு வண்டியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டுள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை மாத பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 21,856 கோடி கடனுதவி

ஆற்றில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT