மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்  
இந்தியா

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது பற்றி...

DIN

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.

இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படும்பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!

டிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்றது வெஸ்ட் தில்லி!

செப்டம்பர் மாத பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்திய மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்! டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

SCROLL FOR NEXT