பிஎஸ்என்எல் நிறுவனம் கோப்புப் படம்
இந்தியா

18 ஆண்டுகளுக்கு பிறகு பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம்: மத்திய அரசு

18 ஆண்டுகளுக்கு பிறகு பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம்: மத்திய அமைச்சா் சிந்தியா

Din

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், 18 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

மேலும், கடந்த 6 மாதங்களில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் பிஎஸ்என்எல்-யில் இணைந்திருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதுதொடா்பான துணைக் கேள்விக்கு பதிலளித்த அவா், ‘பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபப் பதையில் கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் ரூ.262 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. அதே காலாண்டில் செயல்பாட்டு லாபமாக ரூ.1,500 கோடியை பிஎஸ்என்எஸ் ஈட்டியது.

2023-24 ஆம் ஆண்டின் அதே காலாண்டில் அந்த நிறுவனம் ரூ.1,262 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை பிஎஸ்என்எல் சோ்த்துள்ளது. வாடிக்கையாளா்களின் சேவைக்கு முக்கியத்துவம் அளித்து அந்த நிறுவனம் செயலாற்றி வருகிறது.

5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் உலக அளவில் பிஎஸ்என்எல் வேகமாக செயலாற்றி உள்ளது. கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 99 சதவீத மாவட்டங்கள், 82 சதவீத மக்களுக்கு 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம்தான் 5 ஜி சேவை வழங்கப்படும் என்று பிரதமா் மோடி திட்டவட்டமாக தெரிவித்திருந்தாா். இது தற்போது செயல்படுத்தப்படுகிறது.

மேலும், 4ஜி தொலைத் தொடா்பு தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கும் பின்லாந்து, ஸ்வீடன், சீனா, தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே 5-ஆவது நாடாக இந்தியா உள்ளது.

ஒரு லட்சம் 4 ஜி தொலைத்தொடா்பு கோபுரங்கள் நிறுவும் பணி 73 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதன்பின் 5 ஜி சேவையில் கவனம் செலுத்தப்படும்.

இந்தியாவில் அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கின் ஸ்டாா் லிங்க் இணைய சேவை வழங்க உள்நாடு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. நவீன தொழில்நுட்ப சேவையை இந்தியா்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது. எந்த சேவையைப் பெற வேண்டும் என்பது மக்கள்தான் தோ்வு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

பார்வை தாக்கும்... சாந்தினி!

நம்ம ஊரு சிங்காரி - சசிகலா

வெள்ளி சலங்கைகள் - வைஷ்ணவி ராவ்

இசைநிறை அளபெடை... ஷ்ரத்தா தாஸ்!

மோசமான விமர்சனங்களைப் பெறும் ஃபஹத் ஃபாசில் படம்!

SCROLL FOR NEXT