குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி  
இந்தியா

அம்பா தேவி கோயிலில் குஜராத் அமைச்சர் வழிபாடு!

சைத்ர நவராத்திரியின் எட்டாவது நாளில் குஜராத் அமைச்சர் வழிபாடு..

DIN

சூரத்தில் உள்ள அம்பா தேவி கோயிலில் சைத்ர நவராத்திரியின் எட்டாவது நாளை முன்னிட்டு குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வழிபாடு செய்தார்.

வழிபாட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் அமைச்சர். .

நவராத்திரி நாளில் அம்பா தேவியைத் தரிசிக்கும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நவராத்திரியின் குறிப்பாக அஷ்டமி, நவமியின்போது, ​​சூரத்தில் உள்ள அம்பா தேவி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

சத்ரபதி சிவாஜி மகாராஜா சூரத்துக்கு வந்தபோது அம்பா தேவியை வழிபட்டுச் சென்றார். மகா அஷ்டமியான இன்று தேசிய தலைநகரில் உள்ள சத்தர்பூரின் ஸ்ரீ ஆத்ய காத்யாயனி சத்திபீட கோயிலிலும், ஜண்டேவாலன் கோயிலிலும் காலை ஆரத்தி செய்யப்பட்டது. அங்கு ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

இந்துக்கள் ஆண்டு முழுவதும் நான்கு நவராத்திரிகள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் சைத்ர நவராத்திரியும், சாரதா நவராத்திரியும் பரவலாக மக்களால் கொண்டாடப்படுகின்றன என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT