முதல்வர் புஷ்கர் சிங் தாமி 
இந்தியா

10 ஆண்டுகளில் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்: முதல்வர் தாமி!

நாடு முழுவதும் 30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டது மத்திய அரசின் சாதனை..

DIN

மத்திய அரசின் கொள்கைகள் காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

டேராடூனில் இன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 2 நாள் நிகழ்ச்சியில் முதல்வர் தாமி உரையாற்றியனார். அப்போது அவர் கூறுகையில், சமூக நீதி போன்ற முக்கியமான தலைப்பில் தேசிய அளவிலான சிந்தனைத் திருவிழா ஏற்பாடு செய்யப்படுவது தனது மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ் ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகள் என்ற அடிப்படை தாரக மந்திரத்துடன் இன்று நாட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக நாட்டின் சமூக நலத்துறை ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே என்று கருதப்பட்டது. ஆனால் மோடி பிரதமரான பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், திட்டங்கள் கரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் சுமார் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாட்டில் ஒருபுறம் முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருவதாகவும், மறுபுறம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேபோன்று பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் சுயதொழில், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் மிகவும் பின்தங்கிய வகுப்பினரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்களும் மறுவாழ்வு மையங்களும் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT