வெப்ப அலை Center-Center-Bhubaneswar
இந்தியா

ஆந்திரம்: 17 மண்டலங்களில் இன்று வெப்ப அலை எச்சரிக்கை!

17 மண்டலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை..

DIN

ஆந்திரத்தில் இன்று 17 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

17 மண்டலங்களில், கிருஷ்ணா மாவட்டத்தில் 6, என்டிஆர்..யில் 4, பார்வதிபுரம் மான்யம், குண்டூர் மற்றும் பல்நாடு ஆகிய இடங்களில் தலா 2, எலூருவில் ஒரு மண்டலமும் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணைத்தின் நிர்வாக இயக்குநர் கூர்மநாத் கூறுகையில்,

வெய்யில் ஒரேபக்கம் என்றால், வெப்பச்சலனம் காரணம் பார்வதிபுரம் மான்யம், அல்லூரி சீதாராமராஜு, அனகப்பள்ளி, கிழக்கு கோதாவரி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

மத்திய இந்தியாவில் மேற்பரப்பு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பிற மாவட்டங்கள்: கோனசீமா, காக்கிநாடா, எலூரு, என்டிஆர், குண்டூர், பிரகாசம், நந்தியால், அனந்தபூர் மற்றும் ஸ்ரீ சத்ய சாய், செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

அதிகபட்சமாக கர்னூல் மாவட்டம் உலிந்தகொண்டாவில் 40.8 டிகிரி செல்சியஸ், பிரகாசம் மாவட்டம் தரிமதுகாவில் 40.3 டிகிரி செல்சியஸ், சித்தூர் மாவட்டம் கூர்மநாத் மாவட்டம் தவணாம்பள்ளியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தரிமதுகா (பிரகாசம்), எர்ரம்பேட்டை (அள்ளூரி சீதாராமராஜு), தவணாம்பள்ளே (சித்தூர்) ஆகிய 25 இடங்களில் புதன்கிழமை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

ரயில்வே அலுவலா் வீட்டில் ரூ. 3.50 லட்சம், வெள்ளி திருட்டு

‘ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்’: துவாரகாவில் 130 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தல்

தமிழக எஸ்ஐஆா்: 4 சிறப்பு பாா்வையாளா்கள் நியமனம்

SCROLL FOR NEXT