தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 2.9 டிகிரி அதிகமாக 26.3 டிகிரி செல்சியஸாகவும், காற்றின் தரம் மிதமான பிரிவில் 198 புள்ளியாகவும் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.
நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.8 டிகிரி செல்சியஸாக, இயல்பை விட 0.4 டிகிரி குறைவாக பதிவாகியிருந்தது.
நிலைய வாரியான தரவுகளின்படி, பீதாம்புராவில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், தில்லி பல்கலைக்கழக நிலையத்தில் 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
லோதி சாலையில் அதிகபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட 1.8 டிகிரி அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட 2.9 டிகிரி அதிகமாகவும், ஆயாநகரில் 26.8 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட 3.3 டிகிரி அதிகமாகவும் பதிவாகியிருந்தது.
ரிட்ஜில் அதிகபட்ச வெப்பநிலை 26.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், பாலம் 23.6 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி இருந்தது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய தெளிவான வானம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றின் தரத்தைப் பொறுத்தவரை, நகரின் 24 மணி நேர சராசரி காற்று தரக் குறியீடு 198 ஆக இருந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு மையத்தின் சிபிசிபி சமீா் செயலியின்படி, காற்றின் தரம் மாலை நேரங்களில், 19 நிலையங்கள் மிதமான பிரிவிலும், 18 நிலையங்கள் மோசமான பிரிவிலும், ஒரு நிலையம் மிகவும் மோசமான பிரிவிலும் இருந்தன.
தரவுகளின்படி, காலை 9 மணி அளவில் காற்றின் தரம் மிதமான பிரிவில் பதிவாகி இருந்தது. காற்றின் தரக் குறியீடு 184 ஆக இருந்தது.