குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு  
இந்தியா

எதிர்கால தலைமுறையையும் ஈர்ப்பவர் அம்பேத்கர்: திரெளபதி முர்மு

நாட்டின் வளர்ச்சியை நோக்கி எதிர்கால தலைமுறையையும் ஈர்ப்பவர் அம்பேத்கர் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

DIN

நாட்டின் வளர்ச்சியை நோக்கி எதிர்கால தலைமுறையையும் ஈர்ப்பவர் அம்பேத்கர் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (ஏப். 13) தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக மாற்றத்துக்கும் அதிகாரம் பெறுவதற்கும் கல்வி மிக முக்கிய கருவி என்பதை வாழ்ந்து நிரூபித்துக் காட்டியவர் அம்பேத்கர் எனவும் புகழாரம் சூட்டினார்.

பபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாள், நாளை (ஏப். 14) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு,

''வாழ்வின் மோசமான சூழலுக்கு மத்தியில் தனது அசாதாரண சாதனைகள் மூலம் பெரும் மரியாதையையும் தனித்துவமான அடையாளத்தையும் உருவாக்கியவர் அம்பேத்கர்.

சமூக மாற்றத்துக்கு கல்வி மிக முக்கியமான கருவி என்பதை நிறுவியவர். தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாரம் பெறுவதற்கும் கல்வியே அவசியமானது என்பதை வாழ்ந்துகாட்டி நிரூபித்தவர்.

பல்வேறு துறைகளில் அவரின் பங்களிப்பானது எதிர்கால தலைமுறையினரையும் கவரும். நாட்டைக் கட்டியெழுப்புவதில் எதிர்கால தலைமுறையினரை ஈர்ப்பவர்.

இந்த நன்னாளில் சமூக நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை நோக்கி நாட்டைக் கட்டமைப்பதற்காக அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள உறுதியேற்போம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT