சுரங்கம் - கோப்புப்படம் 
இந்தியா

மீண்டும் தலைப்புச் செய்தியாக மாறவிருக்கும் சில்க்யாரா சுரங்கம்! இந்த முறை?

சில்க்யாரா சுரங்கம் தோண்டும் பணி புதன்கிழமை நிறைவடையவிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் தோண்டப்பட்டு வந்த சில்க்யாரா சுரங்கப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இருபக்கத்திலிருந்தும் தோண்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கம் புதன்கிழமை, ஒன்றையொன்று சந்திக்கவிருக்கிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சில்க்யாரா சுரங்கத்தில் விபத்து நேரிட்டு, தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் சில்க்யாரா சுரங்கத்தின் மீது குவிந்தது. சார் தாம் கோயில்களுக்குச் செல்ல மிக விரைவான பயணத்தை ஏற்படுத்தும் இந்த பாதையை அமைக்கும் பணி ஒரு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், 40 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். சுமார் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

சுமார் 4.5 கி.மீ. சுரங்கப் பாதையை அமைக்கும் பணிக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. புதன்கிழமை சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்து, முழுமையாக இந்தப் பக்கத்திலிருந்து புறப்பட்டு அந்தப் பக்கத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கும் மாறவிருக்கிறது.

எனவே, அடுத்த ஓராண்டுக்குள் சுரங்கப் பாதையில் சீரமைப்பு மற்றும் ஒழுங்கமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT