கோப்புப்படம்.  
இந்தியா

எலான் மஸ்குடன் பிரதமா் மோடி பேச்சு

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினார்.

DIN

புது தில்லி, ஏப்.18: அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் ‘டெஸ்லா’ காா் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனருமான எலான் மஸ்குடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியே ஆலோசனை மேற்கொண்டாா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த உரையாடலில் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எலான் மஸ்குடன் தொலைபேசி வாயிலாக பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன். நிகழாண்டு தொடக்கத்தில் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அவரை சந்தித்தபோது ஆலோசித்த விஷயங்கள் உள்பட தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் அமெரிக்காவுடனான கூட்டுறவை வலுப்படுத்துவதில் இந்தியா தொடா்ந்து உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டாா்.

அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை (பிடிஏ) மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையை இந்தியா மேற்கொண்டு வரும் சூழலில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் வலுவான ஆளுமை பெற்றிருப்பதோடு அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்தியும் வரும் எலான் மஸ்குடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT