அமெரிக்காவில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு. 
இந்தியா

அமெரிக்காவில் ராகுல் காந்தி!

ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக...

DIN

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார்.

அமெரிக்காவின் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பித்ரோடா வரவேற்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே, ராகுல் காந்தி நாளை(ஏப். 21) மற்றும் நாளை மறுநாள்(ஏப். 22) பிரௌன் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பேராசிரியர்கள், மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இது தவிர அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாளா்களுடனும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த ஆண்டு ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் இந்தியா குறித்தும், பாஜக, ஆா்எஸ்எஸ் குறித்தும் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT