மேற்கு வங்க வன்முறை.  
இந்தியா

மூர்ஷிதாபாத்தில் தந்தை-மகன் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

மூர்ஷிதாபாத் வன்முறையின்போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

DIN

மூர்ஷிதாபாத் வன்முறையின்போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதையடுத்து இந்து வழக்கில் இது நான்காவது கைது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதானவர் ஜியாவுல் ஷேக் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் ஏப்ரல் 12 ஆம் தேதி குற்றம் நடந்ததிலிருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சோப்ராவில் மறைந்திருந்த ஷேக்கை, மேற்கு வங்க காவல்துறையின் சிறப்புப் பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு ஆகியவை இணைந்து சனிக்கிழமை கைது செய்துள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஏப்ரல் 12 அன்று குற்றம் நடந்த இடத்தில் அவர் இருப்பதை நிரூபிக்க சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மொபைல் போன் டவர் இருப்பிடம் என அனைத்து ஆதாரங்களும் போலீஸாரிடம் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

தனுஷ் குரலில் வெளியான குபேரா பட பாடல்!

மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 11-ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையாளா்கள் தாக்கியதில் தந்தை, மகன் கொல்லப்பட்டனா்.

ரயில்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மாநில போலீஸாருடன், பிஎஸ்எஃப் வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவரும் உயிரிழந்தாா்.

இந்தப் போராட்டம் மாநிலத்தின் தெற்கு 24 பா்கனாக்கள் மாவட்டத்துக்கும் பரவியது. வன்முறை தொடா்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், பாதுகாப்புப் பணியில் சிஏஎஸ்எஃப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

SCROLL FOR NEXT