வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழு வீச்சில் 5ஜி இணைய சேவையை வழங்கி வருகிறது. படிப்படியாக இணைய சேவையை பயனர்களை அதிகரிக்கும் திட்டத்தையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப், பிகார் உள்ளிட்ட இடங்களில் 5ஜி இணைய சேவை வழங்குவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இதனிடையே சந்தையில் உள்ள பயனர்களைக் கவரும் வகையில், பிரீபெய்ட் திட்டத்தில் ரூ. 299-க்கு 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதத்துக்கு 300ஜிபி இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போது ஆரம்பக்கட்டமாக குறைந்த விலையில் 5ஜி சேவையை வழங்குகிறது. ரூ. 299-க்கு ரீசார்ஜ் செய்தால், அளவற்ற அழைப்புகள் - நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள், இவற்றுடன் ஒரு நாளைக்கு 1ஜிபி இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது 28 நாள்களுக்குப் பொருந்தும்.
பிரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்டுவருவதைப் போன்று, வரம்பற்ற (அன்லிமிடெட்) இணையம் இதில் வழங்கப்படவில்லை.
இதையும் படிக்க | இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.