ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தினரை வரவேற்ற நரேந்திர மோடி ANI
இந்தியா

பிரதமர் மோடி இல்லத்தில் அமெரிக்க துணை அதிபர்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

DIN

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 21) சந்தித்தார்.

தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற ஜே.டி. வான்ஸை பிரதமர் வரவேற்றார்.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வணிக ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் அவர்களின் பேச்சுவார்த்தைகளில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் 4 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமான நிலையத்தில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை வரவேற்றார். வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், குழந்தைகள் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.

துணை அதிபருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க | இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி!

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

SCROLL FOR NEXT