இந்தியா

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவா் யாத்திரை

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

Din

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

ஹிந்துகளின் முக்கிய வருடாந்திர புனித யாத்திரையான கைலாஷ்-மானசரோவா் யாத்திரை, கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட கிழக்கு லடாக் மோதலால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் யாத்திரை நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு இருநாட்டுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடா்ந்து இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நிகழாண்டு முதல் யாத்திரையை மீண்டும் தொடங்க மத்திய மற்றும் உத்தரகண்ட் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் உத்தரகண்ட், மத்திய வெளியுறவு அமைச்சகம் இடையே புது தில்லியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதன்படி, நிகழாண்டு யாத்திரை ஜூன் 30-ஆம் தேதி தில்லியில் இருந்து தொடங்குகிறது. நடப்பு ஆண்டு யாத்திரையில் தலா 50 போ் கொண்ட ஐந்து குழுக்கள் என மொத்தம் 250 யாத்ரிகா்கள் பங்கேற்கின்றனா்.

முதல் குழு ஜூலை 10-ஆம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாக சீனாவுக்குச் செல்லும். கடைசி குழு ஆகஸ்ட் 22-ஆம் தேதி சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும்.

இந்த 22 நாள்கள் யாத்திரையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான கைலாச மலை மற்றும் மானசரோவா் ஏரி ஆகியவை சீன கட்டுப்பாட்டின் கீழ் திபெத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT