அபிர் குலால் திரைப்படத்தின் காட்சி 
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானிய திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை!

பாகிஸ்தான் நடிகரின் திரைப்படம் இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது...

DIN

பாகிஸ்தான் நடிகரின் திரைப்படம் இந்தியாவில் திரையிடப்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானின் நடிப்பில் உருவானப் படமான ‘அபிர் குலால்’ வரும் மே.9 ஆம் தேதி முதல் இந்திய திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களினால் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவு வருகின்றது.

மேலும், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டு இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டதுடன் அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அபிர் குலால் திரைப்படத்தின் போஸ்டர்

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கம் முடக்கப்பட்டதுடன் பாகிஸ்தானிய திரைப்படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமான பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானின் ’அபிர் குலாம்’ படத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் அதிகரித்து உள்ளதால், அந்தப் படம் இந்தியாவில் திரையிடப்பட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் ஃபவாத் கான்; குப் சூரத், கபூர் அண்ட் சன்ஸ், ஏ தில் ஹே முஷ்கில் போன்ற இந்தியத் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT